நம்ப முடியவில்லை... நடந்திருக்க வாய்ப்பில்லை... என்று எண்ணியவர்களுக்கு இப்போது நடந்தது ஏதோ உண்மை போல தோன்றினாலும்... நம்பமுடியவில்லை... சிலருக்கோ உள்மனம் நடந்தவற்றை நம்பினாலும் வெளிப்படுத்த முடியவில்லை. எட்டப்பர்களுக்கோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத குதுகலிப்பு.
உண்மையில் உலக தமிழினம் ஓர் தாங்கமுடியாத வெறுமையை உணர்கிறது. ஆரம்பத்தில் உணர்வேளிச்சியோடும், கொந்தளிப்பகவும் இருந்த உறவுகளின் உணர்வுகள் பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற சமளிப்புகளால் திசைமாறி விழிபிதுங்கி நிற்கிறது.
நசுக்கப்பட்ட எமது உரிமைப்போரில் ஞாயங்கள் இல்லை எனவும், பயங்கரவதமேனவும் கொக்கரிக்கும் பேரினவாதத்தின் செயற்பாடுகளை ஆதரிப்பதுபோல அடக்கப்பட்டுள்ளது தமிழரின் உணர்வு வெளிப்பாடுகள்.
நினைத்துபார்க்க முடியாத, நடந்திருக்கவே கூடாத, உணர்வுள்ள உலக தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளக்கிய பேரழிவுகளின் தொடர்ச்சியாக பொறுப்பானவர்களிடம் இருந்து வருவதென நம்பப்படும் அறிவிப்புகளும் முடிவுகளும் அதனுள் காணப்படும் முரண்பாடுகளும் கொதித்தெழுந்த தமிழர் உணர்வுகளை பொசுக்கிவிட்டன.
இதன் நற் பயனை அனுபவிப்பவன் பேரினவாதியே. பேரினவாத அடக்குமுறையை பயங்கரவாத ஒடுக்குமுறையாக உலகத்தின் முன் ஞாயப்படுத்த இந்த முரண்பாடுகள் ஒருவகையில் உதவியிருக்கிறது. தமிழர்களின் விருப்புக்கு அப்பாலான ஒரு போராட்டத்தையே ஒடுக்கியதாக பிரகடனம் செய்து பிரச்சாரப்படுத்த உதவியிருக்கிறது.
பல்லாயிரம் அப்பாவிகளின் உயிர்கள் உடைமைகள் அளிக்கப்பட்டு, மூன்று லட்சதித்கும் அதிகமான உறவுகள் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு, தமிழரின் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி அவர்களின் அரசியல் உரிமைகளுக்காக இறுதிமுச்சுவரை பேரினவாத படைகளையும் நாசகார வல்லருசுகளின் நயவஞ்சக சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு நின்றவர்கள் அளிக்கப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்துபயனித்த பாதை மூர்க்கத்தனமாக அடைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அழிவுகளால் பதறியடித்து கொதித்துப்போன உலக தமிழர்களின் உணர்வுகளை உலகின் மனச்சட்சியின்பால் திருப்பி, அதை உலுப்பி நசுக்கப்பட்ட எமது உரிமைப்போராட்டத்தின் ஞாயங்களையும் அந்த ஞாயாத்தின்பால் உலகத்தமிழர் கொண்டிருந்த அசைக்கமுடியாத ஈடுபாட்டையும் உணர்த்தியிருக்க வேண்டாமா?
எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை தாங்கமுடியவில்லை என்பதற்காக, தமது விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் எமது உரிமைகளுக்காக ஆண்டாண்டு காலமாக பல துன்பங்களுக்கு முகம்கொடுத்து இறுதிவரை மண்டியிடாது போன எம் உன்னத தலைமகனை, தளபதிகளை, போராளிகளை நினைவில் இருத்தி அவர்களுக்குரிய இறுதி வணக்கங்களை உலகறிய உயர்த்தி சொல்லவேண்டாமா?
32 நாடுகளின் கண்களில் பயங்கரவாதிகளாக தெரிந்தவர்கள் 8 கோடி தமிழர்களின் மனங்களில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாமா? உலகின் பார்வை திரும்பயுள்ளபோது வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகளை எம்மனங்களில் தேக்கி, உள்ளுக்குள் அழுவதால் எதைத்தான் சாதிக்கமுடியும்? புரியவில்லை இதில் உள்ளதாக கூறப்படும் ராஜதந்திரம்.
தாய் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் செய்தி அறிந்து பேரெழுச்சி பெற்ற தமிழர்களின் எழுச்சிகள் ஏன் அடக்கப்பட்டன. அந்த உணர்ச்சிகள் உலகின் செவிப்பறையை கிழித்திருக்க வேண்டாமா? இதுதானா இவர்கள் தலைமைமேலும் அவரின் இலட்சியமேலும் கொண்டிருந்த உணர்வின் வெளிப்பாடு என்று பேரினவாதிகளே ஏளனம் செய்யும் அளவுக்கு ஏன் இந்த முரண்பாடுகள்? எப்போது நாம் மீண்டும் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது?
டேவிட் மிலிபண்டும், மற்றும் பல மனிதநேயர்களும், டைம்ஸ் நாளிதழும் செய்யநினைப்பவற்றுக்கவது உதவ முடியதவர்கலகவா மற்றப்பட்டுவிட்டோம்? இழைக்கப்பட்ட அநீதிகளை தகுந்தமுறையில் உலக மனச்சாட்சியின் முன் அடையாளப்படுத்தவேண்டிய பொறுப்புகளை யார் முன்னெடுப்பது?
எதிர்பாராத திருப்பங்களால் வெற்றிக்களிப்பில் குதுகலிக்கும் பேரினவாதிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலும் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இலட்சிய பயணம் பல்வேறுபட்ட முறைகளில் முன்னகர்த்தப்படலம் என மிரண்ட பேரினவாதிகளுக்கு சமகால நிலைமைகள் புதுத்தென்பு கொடுத்திருக்கிறது.
பயணித்த பாதையில் தொடரமுடியதநிலையில், மாற்று வழிகளை ஆராயும் பொறுப்பை தலைமையால் நியமிக்கப்பட்டவர்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சிகளுக்கு அறிந்தும் அறியாமலும் தடையாய் இருப்போர் சற்று சிந்தித்து செயல்படுவது தேசிய தலைமைக்கு அதன் உயரிய இலட்சியத்திற்கும் அவர்கள் செலுத்தும் சிறந்த மரியாதையாகும்.
துரூபன்

Hi.. All please read this and send me your feedback.
ReplyDeleteSOLVATHU UNMAI THAAN. ENRAALUM MUDIYAVILLAI ....ENGKAL NAMPIKKAJE ILLAI ENRU SOLVATHAI YAAR NAMPUVATHU???????????????????????
ReplyDelete